கேள்விகளுக்கு கிடைத்த பதில் இவர்

கேள்விகள் கேற்பது சுலபம், பதில் சொல்வது கடினம். ஒருவர் கேற்கும் கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்வபவராக, அதிலும் எவ்வளவு கடினமான கேள்விகளாக இருந்தாலும் அதற்கு சுலபமாக பதில் அளிப்பவராக ஒருவர் இருந்திருக்கிறார்.

அதேபோல் ஆன்மிகம் ஒரு மனிதனை புனிதமாக்கும் ஒரு கருவியாக இருக்கிறது என்பது பலரது நம்பிக்கை. அது ஒருவகையில் உண்மையும் கூட. அதிலும் ஆன்மிக பாதையை தேர்ந்தெடுப்பவர்கள் திருமணம் என்பதை முற்றிலும் தவிர்த்து விடுவார்கள். காரணம் திருமணம் செய்துகொண்டால், முழுமையாக ஆன்மிக பயணத்தில் ஈடுபட முடியாது. இருந்தாலும் திருமணத்திற்கு பிறகும் ஆன்மிக பயணத்தில் உச்சம் தொட்டவர், இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர், குருவை மிஞ்சிய சீடனாக விளங்கும் விவேகானந்தரின் குருவுமானவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.

கதாதர சட்டோபாத்யாயர் என்ற ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் பிப்ரவரி 18, 1836 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் 19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மிகவாதிகளுள் ஒருவர். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர். திருமணத்திற்கு பிறகு வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் சன்யாசம் மேற்கொள்பவர்கள் மத்தியில் திருமணத்திற்கு பிறகு தனக்குள் எழுந்த நான் யார் என்ற கேள்விக்கு விடை தேடி சென்று பல கேள்விகளுக்கு விடைகொடுத்துள்ளார். சிறுவயதில் கலைத்துறையில் ஆர்வம் கொண்ட இவருக்கு கல்வி பெரும் சோம்பலை கொடுத்தது. இருந்தாலும் குடும்பத்தின் வறுமை காரணமாக கொல்கத்தாவிக்கு சென்று அண்ணனுடன் பணிபுரிய ஆரம்பித்தார். அங்கு ஏற்பட்ட மற்றம் தான் நாம் இன்று அறிந்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். ஒரு கோவிலுக்கு பூசாரியாக பணியாற்றியவருக்கு தனது கேள்வியால் கிடைத்த ஞானத்தால் தான் ஞானியாகியுள்ளார். கேள்விகள் கேப்பவன் மனிதராகிறான். அதற்கு பதில் கொடுப்பவன் ஞானியாகிறான்.