கோவையில் ஜிஎம் அதிநவீன அனுபவ மையம் துவக்கம்

கோவை, இணைய தொடர்பிலான எலக்ட்ரிக்கல் கருவிகள் மற்றும் வீடுகளில் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ற தானியங்கி முறைகளை உருவாக்குவதில் ஜிஎம் முன்னணியில் உள்ளது. கோவையில் முதல் முறையாக புதிய அனுபவ மையத்தை  துவக்கியுள்ளது. இந்த மையத்தில், தொழிலுக்கு ஏற்ற வகையிலான பல புதுமையில் உருவான இணைய தீர்வுகளால் உருவான புதிய தலைமுறை ஸ்விட்சுகள், வீடுகளுக்கான தானியங்கி அமைப்புகள், எல்இடி பொருட்கள், பேன்கள், ஒயர்கள், கேபிள்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. கோவை மில் ரோட்டில் உள்ள கே–எலக்ட்ரிக் ஜோன் கடையில், 1000 சதுரடியில் இந்த அனுபவ மையம் அமைந்துள்ளது.

ஜிஎம் மாடுலர் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜெயந்த் ஜெயின் கூறுகையில், ‘‘தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு, ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அமைந்துள்ளது. வாடிக்கையாளர்கள், பொருட்களை தொட்டு உணர்ந்து, முதல்முறையாக பயன்படுத்திய பின்னரே வாங்குகின்றனர். இந்த மையமானது, வாடிக்கையாளர்களை நெருங்கிச் சென்று, பிராண்ட் மற்றும் அதன் சேவைகளை நேரடியாக உணரச் செய்யும் வாய்ப்பை அளித்துள்ளது. தென்னிந்தியாவில் உள்ள எங்களது வாடிக்கையாளர்கள், மிகவும் விரும்பும் எலக்ட்ரிக்கல் பிராண்ட் ஆக கொண்டுள்ளனர். தங்கள் விரும்பும் வகையிலான புதுமையான பொருட்களை தேர்வு செய்கின்றனர்.’’ என்றார்.

இந்த மையத்தில், வாடிக்கையார்கள் நேரடியாக நவீன வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டுக்கான தீர்வுகளையும், ஜிஎக்ஸ் வகையான அதிநவீன எலக்ட்ரிக்கல் தயாரிப்புகளையும் பார்வையிட முடியும். புதிய தலைமுறைக்கான பேன்கள், அழகிய வடிவிலான ஒடிசி சீலிங் பேன்,  சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்ஹாட் விருது பெற்ற ஜெபையர் பெடஸ்டல் பேன், அதன் சிறப்பான இயக்கங்களையும் அழகான நிர்ணயத்தையும் உணர முடியும்.

ஜிஎம் மாடுலர், இந்தியா முழுவதும் 14 நேரடி அனுபவ மையங்களைக் கொண்டுள்ளது. சமீபத்தில் புதுச்சேரியில் ஒரு மையம் துவக்கப்பட்டது. பார்வைக்கு அழகாகவும், பயன்பாட்டிற்கு வசதியாகவும் சமநிலையுடன் அதிநவீன தொழில்நுட்பத்தில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.