எஸ்கேடி ப்ரோமேட்டர்ஸின் புதிய கட்டிட அலுவலக திறப்பு விழா

கணபதி கோபால்சாமி கோவில் பின்புறத்தில் அமைந்துள்ள எஸ்கேடி ப்ரோமேட்டர்ஸின் புதிய கட்டிட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் ஃபைரா தேசிய தலைவர் ஹென்றி, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோவை மாவட்ட தலைவர் நேருநகர் நந்து, அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

இவ்விழாவில் எஸ்கேடி ப்ரோமேட்டர்ஸின் நிறுவனர்கள் செல்வக்குமார், கருப்புசாமி, தேசிய ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்,  எஸ்கேடி ப்ரோமேட்டர்ஸின் அலுவலர்கள், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

மேலும், எஸ்கேடி ப்ரோமேட்டர்ஸின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன. இதுமட்டுமின்றி எஸ்கேடி ப்ரோமேட்டர்ஸ் நிறுவனர் செல்வக்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு 41 கிலோ கேக் வெட்டி கொண்டாடினர்.