ரசிகர்களை ஏமாற்றிய ஷாருக்கான்

பாலிவுட் திரைப்படங்கள் எப்போதும் தனக்கென்று வித்தியாசமான கதைக்களத்தில் படமாக்கப்பட்டு வருகின்றது. அத்துடன், தொழில்நுட்ப ரீதியாகவும் பலசாதனைகளை படைத்து வருகின்றது. பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கான் உலகம் முழுக்க ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர். கதை பேசும் அளவுக்கு இவரின் நடிப்பும் பேசும் என்பது மக்களின் கருத்து. தனது படத்தை அனைவரும் சந்தோஷமாக பாரக்கும் அளவுக்கு சிறப்பாகக்  கொடுக்க வேண்டும் என்பதை சிந்தித்து செயல்பட்டு வருபவர் ஷாருக்கான்.

கடந்த வாரம் ஷாருக்கான் நடித்த ‘ஜப்ஹர்ரி மீட் சிஜில்’ படம் வெளியானது. இம்தாஸ் அலி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம் என்றவுடன் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிட்டது என்று சொல்லலாம்.

இப்படத்தின் கதை, ஷாருக்கான் வெளிநாட்டில் டூரிஸ்ட் கைடாக பணிபுரிந்து வருகிறார். அப்பொழுது மிகவும் பரபரப்பான பெண்மணியாக வலம் வரும் அனுஷ்கா சர்மா, ஷாருக்கானை சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. இவர்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே மீதி கதை. கதை பெரிய அளவுக்கு இல்லை என்றாலும் சில இடங்களில் இமிதாஸ் அலி படம் என்று உணர்த்தி இருக்கிறார். திரைக்கதை மிகவும் மெதுவாக நகர்ந்தது படம் பார்க்கும் அனைவரையும் முகம் சுளிக்க வைத்து விட்டது. ஒட்டு மொத்த காட்சிகளிலும் ஷாருக்கான், அனுஷ்காசர்மா வலம் வருகின்றனர்.

ஷாருக் படத்தில் எப்போதும் ஒரு நட்சத்திரப் பட்டாளம் இருக்கும். ஆனால் இதில் அவ்வாறு இல்லை என்பது அவரது ரசிகர்களை கவலைக்கு உள்ளாக்கியது. படம் முடியும் அரைமணி நேரத்துக்கு முன்பே பலர் திரையரங்கை விட்டு சென்றுவிட்டார்கள். இம்தாஸ் அலி, கதை சொல்வதில் பல வித்தியாசமான முயற்சிகளை எடுக்கக் கூடியவர். ஆனால் இதில் அந்த செயலை செய்யாமல் விட்டுவிட்டார்.

படத்தில் சொல்லக் கூடிய அளவுக்கு இருக்கும் விஷயம், ஒளிப்பதிவு. ஒளிப்பதிவாளர் கே யூ மொஹன்னான், தனது காட்சி அமைப்பு பாணியில் அனைவரையும் ஒரு புது உலகத்துக்குள் அழைத்துச் செல்கிறார். இதற்கு முன்னர்  இமிதாஸ் அலி இயக்கிய Highway , ராக் ஸ்டார், தமஸா போன்ற படங்களை ஒப்பிடும் போது இந்தப் படம் பலரை முகம் சுழிக்க வைத்து விட்டது.

—– பாண்டிய ராஜ்.