வாழ்வெல்லாம் வசந்தம்…

வாழ்க்கையை வசப்படுத்தவும் வளப்படுத்தவும் அறிவு அவசியம். வாழ்க்கையின் தொடக்க காலத்தில், அதாவது இளம்பருவத்தில் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு பள்ளிகளையும் கல்லூரிகளையும் நாடுபவர்கள், பணியில் சேர்ந்ததும் படிப்பதை நிறுத்தி கொள்கிறார்கள்.கற்பது தேர்வில் வெற்றி பெறுவதற்கும் வேலையைத் தேடிக் கொள்வதற்கும் என்றுதான் பெரும்பாலானவர்கள் எண்ணுகிறார்கள். தேர்வில் தேறுவதும் பணியில் சேருவதும் முக்கியம்தான் என்றாலும், வாழ்க்கையில் வெல்வது அவற்றைவிட முக்கியம்.தொடர்ந்து வளராதமரம் மரணத்தை தழுவுகின்றது.அதுபோலவே, அறிவு வளத்தைப் பெருக்கவில்லை என்றால் மனிதனின் வாழ்க்கையிலும் வசந்தம் தொடர்ந்து பூத்துக் குலுங்காது.

வாழ்நாள் முழுவதும் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். வாசிக்கின்ற மனிதர்கள்தான் வளர்கின்றார்கள். வாசிக்கவாசிக்கத்தான் வாழ்க்கை நமக்குப் பிடிபடுகின்றது. வாசிப்பின் மூலம் கிடைக்கும் அறிவு ஒருவருடைய எண்ணங்களைச் செதுக்குகின்றது. எண்ணங்கள் கூர்மையானால், சவால்களைச் சாதனைகளாக மாற்றும் வல்லமை மிக்கதாக மனம் மாறிவிடுகின்றது.

தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோருக்குப்  பல்வேறு விதமான பயிற்றுவிப்பு வகுப்புகள் நடைபெற்றாலும், பெரும்பாலும் அவை தொழில்சார்ந்தவைகளாக, தரம் சார்ந்தனவைகளாக, உற்பத்தித் திறன் உயர்வு குறித்தவைகளாகவே இருக்கின்றன. ஆனால் தனி மனித சிந்தனை வளமேம்பாடு, மகிழ்ச்சியான குடும்ப நிர்வாகம், குழந்தை வளர்ப்பு, ஆரோக்கியமான உணவு முறைகள், உலக நடப்புகள், அறிவியல், ஆன்மிகம் போன்றவை குறித்து தெளிவை உண்டாக்கும் விதமாகபயிற்சி வகுப்புகள் நடைபெறு வதில்லை. அத்துடன் உற்பத்தி நேரத்தை இதுபோன்ற பயிற்சிகளுக்குச் செலவழித்தால், உற்பத்திக்கான செல வினம் அதிகரிக்கக்கூடும். அதனை வாடிக்கையாளர்கள்ஏற்கத் தயாராக இல்லை.

வாடிக்கையாளர்களின் பணத்திற்கு மதிப்புக் கூட்டாதஎந்தச் செலவையும் அவர்கள்ஏற்க மாட்டார்கள். தனிமனிதன் மேம்பாட்டால், அவனுடைய மனநலமும் சிந்தனையும் சிறந்தால், அவனுடைய வேலையில் அது மிளிரும் என்றுவாதிடலாம்.ஆனால் அதனை எத்தனை நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளும்!?

பணி செய்யும் போது, உடற்சோர்வு ஏற்படுவது இயற்கையே. பணிமுடிந்து வீட்டுக்குச் சென்றதும் சிறிது நேரம் வாசிக்கும் பழக்கத்தை உடையவர்கள், மனச்சோர்வு நீங்கி உற்சாக மடைவதைப் பார்த்திருக்கிறேன். எண்ணங்களுக்கு எழுச்சியூட்டுவதன் மூலமாக எண்ணியதை அடைய முயற்சிகளைத் தொடங்கவும் தொடரவும் முடியும்.

நூல்கள் எப்பொழுதும் நல்ல நண்பர்களாகவேவிளங்குகின்றன.அறியாமையைப் போக்கி, அகத்தில் அறிவு தீபம் ஏற்றுபவைஅவை. நெஞ்சில் அறிவு தீபம் அணையாமல் எரிவதற்கு தொடர்ந்து வாசிப்பு அவசியம்.வாழ்வின் பிரச்சனைப் பக்கங்களை, அறிவின் வெளிச்சத்தில் வாசிக்கும்போது, எளிதில் தீர்வுகள் கிடைத்து விடுகின்றன. அறிவு வளரவளரஅச்சம் விலகும்; தன்னம் பிக்கை துளிர்க்கும். வாசிப்பவன் எப்பொழுதும் உள்ளத்தில் தெளிவு டனும், செயலில் துணிவுடனும் விளங்குகின்றான். கற்றார்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள். அது உண்மைதான்.

பாட்டாளிகளை படிப்பாளி களாகவும், படிப்பாளிகளை பண்பாளர்களாகவும் மாற்ற வேண்டும். அதற்காக வீட்டுக்கும் வேலைக்கும் இடையே ஓடிக் கொண்டிருக்கும் உழைப்பாளர்களைப் படிக்க வைக்கும் முயற்சியை, கோவை புத்தகத்திருவிழா குழுவினர் எடுக்க விரும்பினர்.மூன்று மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றஆலோசனைக் கூட்டத்தில் சி.ஆர்.ஐநிறுவனத்தின் சேர்மன் திரு. வேலுமணி அவர்களின் உள்ளத்தில் இருந்து எழுந்ததுதான் இந்த எண்ணம். அக்னிச் சுடராக வெளிவந்த இவ்வெளிச்சக் கருத்தை அனைவரும் முழுமனதுடன் வரவேற்றார்கள். கோவைப் புத்தகத் திருவிழாவின் தலைவர் திரு.சவுந்திரராஜன் அவர்கள், இம்முயற்சியை எவ்வாறு செயலாக்கம் செய்வது என்பது குறித்த எனது கருத்துக்களை கேட்டறிந்தார். கருத்துக்களின் ஊர்வலம் எனது உள்ளத்தில் நிகழ்த்த தொடங்கியது.

இத்திட்டத்திற்கு “தொழிலகம் தோறும் நூலகம்“ என்ற பெயர் வைத்தோம். பணியாளர்களைப் புதுப்பிக்கும் முயற்சிதான் இது. வளர்ந்து கொண்டிருக்கிற செடிதான் உயிர்த் துடிப்புடன்  இருக்கும்.“பூக்களாக இருக்காதீர்கள், வாடிவிடுவீர்கள். செடிகளாக இருங்கள்  பூத்துக் கொண்டே இருக்கலாம்” என்றார் அப்துல்கலாம். அந்தவகையில், அனைத்து நிலைப்பணியாளர்கள், தொடர்ந்து வாசிப்பதன் மூலமாக, நம்பிக்கைமலர்களைத் தினமும் அவர்களுடைய நெஞ்சில் பூத்துக் கொண்டே இருக்க முடியுமல்லவா?

கோவை புத்தகத் திருவிழா 2017, கடந்த ஜுலை 21 முதல் 30 வரை, கோவை கொடிசியா வளாகத்தில் இருநூறுக்கு மேற்பட்ட புத்தக அரங்குகளுடன் நடைபெற்றது. இலக்கியக் கூடல், அறிவுக்கேணி, சிறப்புச் சொற்பொழிவுகள், சிந்தனை அரங்கங்கள், மாணவ மாணவியர் பங்கேற்கும் பல்சுவைக் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கடந்த இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற புத்தகத் திருவிழாவை விட, இந்த ஆண்டு, இன்னும் மிகச் சிறப்பாக நடைபெற்றது என்று உறுதியாகச் சொல்லமுடியும். வளர்ச்சி தான் வாழ்க்கையின் நோக்கம்.

தொழிலகம் தோறும் நூலகம், மற்றும் உழைப்பாளர்களுக்கென ஒரு நாள் முழுவதும், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பட்டிமன்றம் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளையும் ஒருங்கிணைத்து நடத்தும் பொறுப்பு என்னிடம் கொடுக்கப் பட்டிருந்தது. ரூட்ஸ் நிறுவனத்தின் மனிதமள மேம்பாட்டுத்துறையின் பொது மேலாளர் முனைவர் எஸ்.சுதாகர் அவர்களும், மக்கள் தொடர்பு மேலாளர் திரு.எம்.சரவணன் அவர்களும் எனக்குத் துணை நின்று தோள் கொடுத்தார்கள்.

பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான, போட்டி களை கோவையில் உள்ள பல்வேறுகலைஇலக்கிய அமைப்புகள் ஒருங்கிணைத்து நடத்தஉதவின. மேலும், கவியருவி கோவை கோகுலன், கோவை டாக்டர் கிருஷ்ணா மற்றும் கவிஞர் சுப்புதர்மன் ஆகியோர் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து எல்லா நிகழ்ச்சிகளையும் சிறப்பாகநடத்தி முடித்தார்கள்.பாராட்டுக்கள்.

“கொடிசியா” என்பது கூட்டு முயற்சியின் சங்கமம்.தொலை நோக்குப் பார்வையின் உதயக்கிழக்கு. வியர்வைச் சிந்தி வெற்றித்தேன் எடுக்கும் தொழில் முனைவோர்களையும் உள்ளடக்கிய மகாசபை, தொழில், வேளாண்மை சார்ந்த கண்காட்சிகளை ஆண்டு தோறும், அரங்கேற்றி அதன் மூலம், இலட்சக்கணக்கானவர்களின் உள்ளத்தில் ஆர்வத்தையும் தெளி வையும் உண்டாக்கி வருவதோடு, ஆண்டு தோறும் நிகழும் நவீன மாற்றங்களையும் காட்சிப் படுத்தி, காலத்தோடு தொழிலை மாற்றிய மைத்துக் கொள்வதற்கும், முன்னேற்றிக் கொள்வதற்கும் உரிய களத்தை அமைத்துக் கொடுக்கின்றார்கள்.

உழவு, தொழில் என்பதோடு அறிவுத் தேடலையும், பண்பாட்டு விழுமியங்களையும் நோக்கி, கோவையை மட்டுமல்ல கொங்கு மண்டலத்தையே புத்தகத் திருவிழாவின் மூலமாக திருப்பி விட்டிருக்கின்ற “கொடிசியா”வை மொத்தமாக வாழ்த்துவோம்.

பணியாளர்கள் பெரிதும் மகிழ்ச்சியாக இருப்பது, பணிய கத்திலா? இல்லத்திலா?என்ற பட்டிமன்றத்திற்கு நடுவராகப் பங்கேற்றேன். இரு அணியினரின் கருத்து மோதல்களுக்குப் பின்னர், இல்லமேஎனத் தீர்ப்பு  வழங்கிவிடைபெற்றேன்.

இதுபோன்ற புதிய முயற்சிகள், வாசிக்கும் சமுதாயத்தையும் பிறரை நேசிக்கும் சமுதாயத்தையும் உருவாக்கும் என்பது உறுதி.