‘இயற்கைப் பேரழிவுகளை யாகத்தினால் சரி செய்ய முடியும்’

பாரதிய ஹிந்து பரிவார் இயக்கத்தின் ஆன்மிக அணி இளம் ஜோதிடர் தினேஷ்

‘மனித வாழ்க்கையில் ஜோதிடம் மிகவும் அவசியம். மனிதனாக பிறந்தால் ஏதோ ஒரு விஷயத்தில் சாதித்துக் காட்ட வேண்டும். வாழ்க்கைப் பிரச்னைகளால் நமது இலட்சியத்தை இழந்துவிடக் கூடாது. ஜோதிடர் என்று சொன்னால் பொதுவாக சிலர் சிந்திப்பதுபோல் நான் இருக்க விரும்பவில்லை. அதில் உள்ள ஆழத்தைத் தெரிந்துகொண்டு செயல்பட முடிவு எடுத்தேன். அப்படி முடிவெடுத்து ஜோதிட சாஸ்திரத்தை படிக்க முற்பட்டபோது அதில் பலதரப்பட்ட அதிசயங்கள் இருப்பதைக் கண்டு வியந்தேன்.

நம் கலாச்சாரத்தை பெருமைப்படுத்தும் இன்னொரு முக்கிய பாதைதான் ஜோதிடம். இயற்கையில் நடக்கும் நல்லது, கெட்டதுக்கும் சரியான விடை ஜோதிடத்தில் இருக்கிறது. அத்துடன் ஜோதிடத்தில் சொல்லப்படும் நல்ல விஷயங்களை சரியாகப் புரிந்துகொண்டு செயல்பட்டால், வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கும். மக்களுடைய பிரச்னைகளுக்கு ஜோதிடம் எந்த அளவுக்குத் தீர்வாக அமையும் என்ற எண்ணிக் கொண்டிருந்தபோது, ஜோதிடர் மாநாடு ஒன்று நடைபெற்றது. அங்கே அறிமுகம் ஆனவர்கள்தான் மணிமேகலை, சந்திரன், குரு பாலசுப்பிரமணி, பிரகாஷ் ஆகியோர். அந்த ஜோதிட மாநாட்டிற்குப் பிறகு எங்கள் நட்பு மிகவும் ஆழமானது. ஏனெனில், எங்கள் சிந்தனை, செயல் ஒரே மாதிரி இருந்தது.

இந்நிலையில், மக்களுக்குப் பயன்படும் வகையில் ஜோதிட ரீதியாக நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதில் ஒன்றுதான் மகா பிரபஞ்ச யாகம் நடத்த வேண்டும் என்பது. நமது விரல்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை, அதைப்போல் ஒவ்வொரு மனிதனுக்கும் சொல்ல முடியாத பல பிரச்னைகள் இருக்கும். அதில் இருக்கும் சிக்கல்களைத் தகர்த்தெரிந்து சந்தோஷமான வாழ்க்கை அமைவதற்கு இந்த மகா பிரபஞ்ச யாகம் உறுதுணையாக இருக்கும்.

இதற்காக டிசம்பர் 25 ஆம் தேதி கரூரில் அதிகாலை முதல் மகா பிரபஞ்ச யாகம் நடத்த முடிவெடுத்தோம். அதில் 20 வகையான யாகங்கள் நடத்தப்படும். மக்களின் பிரச்னைகளுக்கு ஏற்றாற்போல் அதற்குண்டான யாகங்களில் கலந்து கொள்ளலாம். தொழில் பிரச்னை, திருமணத் தடைகள், மன ரீதியான பிரச்னை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள், தீய சக்திகள், எண்ணங்களைத் தடுத்து, நல்ல எண்ணங்கள், சிந்தனைகள் நம்மைச் சுற்றி எப்போதும் இருக்கவும், வெறுப்பு, ஏக்கம், தயக்கம் போன்ற அனைத்தையும் போக்கக் கூடியது இந்த மகா பிரபஞ்ச யாகம்.

ஒரு மனிதனை அவன் வாழ்வில் ஆட்டிப்படைப்பது ஒன்பது கிரகங்கள். எனவே கிரகப் பலன்களைப் பார்த்து மகா பிரபஞ்ச யாகத்தில் கலந்துகொள்ளும்போது, வாழ்க்கையில் பல மாற்றங்களை உங்களால் உணர முடியும். நம் உழைப்புக்கேற்ற வெற்றி அடைய, இதுபோன்ற யாகங்கள் எப்போது துணையாக இருக்கும்.

இயற்கைப் பேரழிவுகளைக்கூட யாகத்தினால் சரி செய்ய முடியும் என்று சாஸ்திரம் கூறுகிறது. மழை இல்லாமல் விவசாயிகள் கஷ்டப்படும்போது, வருண யாகம் நடத்தினால் மழை பெய்வதைப்போல், இயற்கைப் பேரழிவுகள் வராமல் தடுக்க முன்கூட்டியே யாகங்கள் நடத்துவது நல்லது. நாங்கள் இது அனைத்தையும் புரிந்துகொண்டு மக்கள் அனைவரும் பயன்பெற இந்த யாகம் நடத்த முடிவு செய்தோம். இதை எப்படி எடுத்துவது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, உங்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் என்று பாரதிய ஹிந்து பரிவார் இயக்கம் தெரிவித்தது.

இந்த இயக்கத்தின் மாநிலத் தலைவர் செல்வகணேஷ், செயலாளர் முத்துசாமி ஆகியோர் எங்களுக்கு எது தேவை என்பதைப் புரிந்துகொண்டு எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி. மகா பிரபஞ்ச யாகத்தில் பங்கேற்கும் அனைவரையும் ஜோதிடர் அணி சார்பாக வரவேற்கிறேன்.’’