ஆதித்யா அக்வா டெக் சொலூஷன்ஸின் மழைநீர் சேமிப்பு, எரிசக்தி மேலாண்மை விழிப்புணர்வு

 

இயற்கையை மூலதனமாக கொண்டு நமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் விதமாக ஆதித்யா அக்வா டெக் சொலூஷன்ஸ் மழைநீர் சேமிப்பு மற்றும் எரிசக்தி மேலாண்மை குறித்த விழிப்புணர் வை ஏற்படுத்திவருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் தண்ணீர் பிரச்சனை என்பது எதோ பண்டிகை போல் வந்து செல்கிறது. இதனை தவிர்க்க இயற்கையாக மழையில் இருந்து கிடைக்கும் தண்ணீரை முறைப்படி சேமித்து வைத்தாலே ஓர் ஆண்டின் அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்நிறுவனம் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு இந்த அலுவலகத்தின் மாடி மற்றும் கூரையின் மேல் விழும் மழைநீரை சேமிக்கும் விதமாக ஒரு தொட்டி ஒன்றை கட்டி அதில் சேமித்து வைக்கிறார்கள். இந்த மழைநீரை தொழில்நுட்ப முறையில் சேகரித்தால், கோடை காலத்தில் வறட்சியின்றி இருக்கலாம். இங்கு சேகரிக்கும் மழை நீர் ஆண்டு முழுவதற்கும் தேவையை பூர்த்தி செய்கிறது. மேலும் இங்கு மாநகராட்சி தண்ணீர் பயன்படுத்தப்படுவதில்லை.

இதே போன்றே நிலையை நம் அனைவரின் வீட்டிலும் உருவாக்க முடியும். இதற்கு பெரிய அளவில் நாம் செலவளிக்க தேவையில்லை. இது குறித்து மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லாததால் தண்ணீர் பிரச்சனையை தொடர்ந்து சந்தித்து கொண்டிருக்கின்றனர். அதனால் இது குறித்து இந்நிறுவனம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

தண்ணீர் மட்டுமல்லாமல் எரிசக்தி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மக்கள் அவர்களது வீடுகளில் பயன்படுத்தும் மின்சார சாதனங்கள் மற்றும் அதற்கு தேவைப்படும் மின்சார அளவு குறித்தும், மின் நுகர்வு மற்றும் மின் இணைப்பு போன்றவற்றுக்கும் ஆசோலோசனைகள் வழங்கப்படுகின்றன.

இந்த மையத்தில் நீர் மேலாண்மைக்கான இயந்திரங்கள் மற்றும் எரிசக்தி மேலாண்மைக்கான இயந்திரங்களும் வைத்து அதன் பயன்களையும், பயன்பாடுகளையும் தெரியப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் முழுமையாக இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.