சிறந்த கல்வியாளர் விருது பெற்ற கொங்குநாடு கல்லூரி செயலர்

ஊட்டியிலிருந்து செயல்பட்டு வரும் நீல்கிரீஸ் எபிக் ஈவன்ட்ஸ் அமைப்பு, தென்னிந்திய அளவில் சிறந்த திறன் வாய்ந்த மக்களை அடையாளம் கண்டு கவுரவித்து வருகிறது. இதன் ‘வின்டர் குயின் 2019’ என்ற போட்டி நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் நீலகிரி எபிக் ஈவன்ட்ஸ் பெண் சாதனையாளர்கள் விருது, பல்வேறு துறைகளை சேர்ந்த சிறப்பாக செயல்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டது. இதில் கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் இயக்குனர் மற்றும் செயலாளர் சி.ஏ வாசுகி சிறந்த கல்வியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த கல்வியாளர் விருது வழங்கப்பட்டது.