ஆண்டின் உயரிய பெண்மணி விருது பெற்ற இந்துமுருகேசன்

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள கே.ஐ.டி கலைஞர்கருணாதி தொழில்நுட்பக் கல்லூரியின் துணைத்தலைவர் இந்துமுருகேசன் அவர்களுக்கு நிறுவன சமூக பொறுப்புக்கான இந்த ஆண்டில் உயரிய பெண்மணி என்னும் விருதினை ஜெனீவா,இன்டர்நேஷனல் டெலிகம்யூனிகேஷன் யூனியனின் துணை பொதுச்செயலாளர் மேல்கம் ஜான்சன், ஐக்கிய அரபு நாடுகளின் தூதர் அஹமத் அல் பண்ண மற்றும் பேராசிரியர் சிஎம்ஏஐ யின் தலைவர் என்.கே.கோயல் அவர்களால் புதுதில்லியில் வழங்கப்பட்டது.

இந்த சீரிய விருது 18,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கேஐடி – இன்போநெஸ்ட் மூலம் இணைய பாதுகாப்பு, நெறிமுறை ஹேக்கிங் மற்றும் மொபைல் ஹேக்கர்ஸ் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்ச்சி முகாம் நடத்தியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருதினை பெற்ற கேஐடி கல்லூரியின் துணைத்தலைவர் இந்துமுருகேசனை கல்லூரியின் நிறுவனத்தலைவர் பொங்கலூர்.நா.பழனிசாமி, கல்லூரியின் முதல்வர் மோகன்காந்தி, கல்லூரி முதன்மையர் மாணவர் அமைப்பு சுரேஷ், துணைத்தலைவர், பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினார்கள்.