வரலாற்றில் நாம் பார்த்த மகான் கலாம்

ஆட்டோ சந்திரகுமார்

ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் 26 ஆம் ஆண்டு மற்றும் அப்துல் கலாம் 89 வது பிறந்தநாளை முன்னிட்டு நல்லறம் அறக்கட்டளை,  ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ், கலாம் மக்கள் அறக்கட்டளை இணைந்து 500 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச சீருடை வழங்கினார்கள்.

ஒய்எம்சிஎ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனர் கவிதாசன், ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் அரிமா. செந்தில்குமார், கோவை மாவட்ட அரிமா சங்க துணை ஆளுநர் கருணாநிதி, விசாரணை திரைபடத்தின் மூலம் கதாசிரியர், எழுத்தாளர் ஆட்டோ சந்திரகுமார், மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன், அரிமா.பிரசன்ன மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆட்டோ சந்திரகுமார் பேசுகையில், வரலாற்றில் எத்தனையோ மகான்கள் இருக்கிறார்கள், அவர்களின் பட்டியல் பெரியது. அந்த வரலாற்றில் மிக முக்கிய இடம் பெற்ற கலாமை நம் கண்களால் பார்த்திருக்கிறோம்  என்பது நமக்கு பெருமையான ஒன்று. ஆட்டோ ஓட்டுநர்களாகிய நாம் தொழிமட்டும் செய்வதை விட அதில் ஒரு சேவையை கொண்டு செய்ய வேண்டும்” என்றார்.

இதனையடுத்து  ரூட்ஸ் நிறுவங்களின் இயக்குனர் கவிதாசன் பேசுகையில், “தனிக்கே உரித்தான பாணியில் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களுக்கு வணக்கத்தை கூறி, கலாமின் பிறந்தநாளில் ஆட்டோ ஓட்டுநர்களுக்காக இந்நிகழ்ச்சி நடத்த காரணம் அனைத்து மக்களோடும் கலந்து பணியை செய்து வருபவர்கள் இவர்கள், அதனால் இவர்களுக்கு இந்நாளில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மிக சரியானதே. கலாமின் முன்னேற்றத்திற்கு எப்படி திருக்குறள் இருந்ததோ, அதே போல் என்னக்கும் பிடித்த ஒரு திருக்குறள் கல்வி அதிகாரத்தில் வரும் முதல் குறள் கற்க கசடற குறள் எப்படி துணை கால் இல்லாமல் இருக்கிறதோ அதே போல் ஒருவன் கற்க வேண்டியதை கற்று அதன் படி நடந்தால் யாருடைய துணையும் அல்லாமல் முன்னேறலாம். வருங்காலத்தை உருவாக்கும் உங்கள் குழந்தைகளுக்கு சொந்தக்காலில் நிற்க கற்று கொடுங்கள், அவர்கள் முன்னேற சொல்லிக்கொடுங்கள். இறுதியாக அங்கு வந்திருந்தோர்களுக்கு அறிவுரையாக மது அருந்தாதீர்கள்,அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று கூறி விடைபெற்றார். கோவையைச் சேர்ந்த பல ஆட்டோ ஓட்டுனர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.