கதர் அங்காடியில் காந்தி ஜெயந்தி விழா

கோவை அவினாசி சாலை மேம்பாலம் அருகில் உள்ள கதர் அங்காடியில், அண்ணல் காந்தியடிகளின் 150-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் கதர் சிறப்பு விற்பனை துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி கலந்துகொண்டு காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசுகையில் காந்தியடிகள் நமது நாட்டில் உள்ள இளைஞர் சக்தியினை ஆக்கப்பூர்வமான வகையில் பயன்படுத்தவும், சுயதொழில் செய்து நாட்டினை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் கதர் கிராமத் தொழில் என்ற அமைப்பினை உருவாக்கினார்கள்.

இதன் மூலம் நமது மக்களின் தேவைகளை கிராம மக்களை உற்பத்தி செய்து கொண்டனர். அவ்வாறு தொடங்கப்பட்ட கதர் மற்றும் கிராமத் தொழில்கள் இன்று இந்தியா முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பரந்து மிகவும் போற்றத்தக்க வகையில் பல கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி கொண்டிருக்கின்றது. குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பு பெருமளவில் வழங்கும் வகையில் பருத்தி நூல் உற்பத்தி அழகுகள் செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் கிடைக்கும் நூலினைக் கொண்டு எண்ணிக்கைகளில் நெசவாளர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. பட்டு நூல் இணைகொண்டு பட்டு நெசவுத் தொழிலில் ஈடுபட உள்ளவர்களுக்கும் வாரியத்தின் மூலம் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகின்றது என்றும் கிராமபுற கைவினைஞர்களை ஊக்குவித்து ஆதரவு தரும் வகையிலும், கதர் ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை லாப நோக்கமின்றி பொதுமக்களின் தேவைக்காகவும், பொதுமக்களின் ஆரோக்கியத்திற்காகவும், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி, வருவாய் கோட்டாட்சியர்கள் தனலிங்கம், சுரேஷ், உதவி இயக்குநர் (கதர் கிராம தொழில்கள்) எஸ்.சுரேஷ் மற்றும் வட்டாட்சியர்கள் மகேஷ், தேவநாதன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.