தங்கம் சவரனுக்கு 112 ரூபாய் குறைவு !

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 645 ஆக உள்ளது. கடந்த வாரம் 30 ஆயிரத்தை தாண்டிய ஒரு சவரன் தங்கம், இன்றைய நிலவரப்படி 29 ஆயிரத்து 160 ரூபாயாக உள்ளது. தொடர்ந்து வெள்ளியின் விலை குறைந்து வரும் நிலையில் ஒரு கிராம் 50 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது.