ஆசிரியர்கள் இந்த நாட்டிற்கு முதுகெலும்பு – பக்தவச்சலம்

கே.ஜி. மருத்துவமனையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் மருத்துவத் துறையில் சிறந்து ஆசிரியப்பணியாற்றிய பக்தவச்சலம் அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.

பள்ளிகள் மற்றும் கல்வித்துறை சார்ந்த நிறுவனங்களில் ஆசிரியர் தினம்  கொண்டாடப்பட்டு வருகின்ற இந்நிலையில் கேஜி மருத்துவமனையில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில்,  மருத்துவத்துறையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றிவரும், கோவை மெடிக்கல் கல்லூரி மற்றும் மருத்துவ துறையில் பல்வேறு சிறந்த மருத்துவர்களை உருவாக்கிய கேஜி மருத்துவமனையின் தலைவர் பக்தவச்சலம் அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது. இதில் அவருக்கு விருதுகள் வழங்கி  மருத்துவர்கள் பாஸ்கரன், ராவ், கிரி,சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியம் ஆகியோர் பேசுகையில், மருத்துவத்துறை சார்ந்த பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுப்பதில் பிற மருத்துவர்களுக்கு வழிகாட்டியாகவும் மேலும் அனைத்து மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த அனைத்து பிரிவினருக்கும் ஒரு குருவாகவும் பணியாற்றி வரும் அவருக்கு இந்த ஆசிரியர் தினம் விழாவில் எங்கள் அனைவரும் சார்பாக இந்த நல்லாசிரியர் விருதை அவருக்கு வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுவதாக தெரிவித்தனர்.

கே.ஜி. மருத்துவமனை தலைவர் பக்தவச்சலம் பேசுகையில், மற்ற தினவிழாக்களை போன்று இதுவும் முக்கியமான நாள் தான் என்று நான் எண்ணுகிறேன். நல்ல ஆசிரியர் யாருக்கு கிடைக்கிறார்களோ அவர்களை அதிஷ்டசாலிகள். காலாமுக்கு  ஒரு நல்ல ஆசிரியர் கிடைத்தார்கள், அதே போல் விவேகானதற்கும் ஒரு ஆசிரியர் கிடைத்தார்கள். ஆசிரியர் பனியின் மீது யாருக்கு காதல் இருக்கிறதோ, அவர்களுக்கு வாழ்க்கையின் மீதே காதல் வந்து விடும். யாருக்கு கொடை என்கின்ற எண்ணம் இருக்கிறதோ அவர்கள் நல்லவர்கள், அதனை கல்வியில் செய்தால் அவர்கள் சிறந்த ஆசிரியர்கள். அப்படி தான் ராதா கிருஷ்ணனும் இருந்தார். உலகத்திலேயே சிறந்த ஆசிரியர் கிருஷ்ண பரமாத்மா தான். ஆசிரியர்கள் இந்த நாட்டிற்கு முதுகெலும்பு, என்றார்.