“ஒரு விதை புரட்சி”

இயற்கை பவுண்டேஷன் தன்னார்வ தொண்டு நிறுவனம், PSG சர்வஜன மேல்நிலைப் பள்ளி, PSG பப்லிக் ஸ்கூல் இணைந்து கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை மாணவர்கள் முன் வந்து தருகின்ற “ஒரு விதை புரட்சி” என்கிற பசுமை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 3000 கும் மேல் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு “ஒரு விதை புரட்சி’ மாபெரும் எழுத்து வடிவில் மரக்கன்றுகளுடன் அமர்ந்து தங்கள் ஆதரவும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார், சுமார் 10,000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பி.எஸ்.ஜி பள்ளி செயலாளர் நாராணசாமி அவர்கள் பள்ளி மாணவ மாணவர்கள் சார்பாக 3000 மரக்கன்றுகள் வழங்கி இயற்கையும் விவசாயின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தமிழ்நாடு வனத்துறை, பொள்ளாச்சி, ஆனைமலை புலிகள் காப்பகம் மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து அவர்கள் முன்னிலையில், வாழ்த்து வழங்கி மழை நீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு அவசியம் விளக்கி கூறினார். இயற்கை பவுண்டேசன் நிறுவனர் கூறுகையில், பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ” ஒரு விதை புரட்சி” விழிப்புணர்வு பசுமை நிகழ்ச்சிகள் நடத்தி ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்று கொடுத்து உணவளித்த விவசாயி எதிர்காலம் காத்திடும் பங்களிப்பின் அவசியத்தையும் விவரித்தார். சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ், சின்னத்திரை நடிகர் விஜய்” கலந்து கொண்டு விழாவில் மாணவ மாணவிகளை உச்சாகப்படுத்தினார்கள், நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் கூறுகையில், கஜ புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நலம் காக்க பள்ளி மாணவ மாணவிகள் மரக்கன்றுகளை தரும் ஆர்வத்தை வெகுவாக பாராட்டி, தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சின்னத்திரை நடிகர் விஜய் வயிறு குலுங்க சிரிப்பு சிந்திக்க வைக்கும் காமெடி கலக்கி… அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கனகராஜ் அவர்களின், சங்கமம் கலைக்குழுவின் கிராமியக் கலை நிகழ்ச்சி, வெற்றி சிலம்பம் கலைகுழு ஆசிரியர் ரங்கநாதன் அவர்களின் சிலம்பாட்ட கலை நிகழ்ச்சி, சாதனையாளர் சிறப்பு அமைப்பாளர்களுக்கு விருது. அனைவருக்கும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சியை ஆசிரியர் தமிழ் மணிகண்டன் தொகுத்து வழங்க, போத்தீஸ் பொது மேலாளர் திரு. சத்திய நாராயணன் 2000 மரக்கன்றுகள், சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனர் ராதாகிருஷ்ணன் 1000 மரக்கன்று சங்கீதா 500 மரக்கன்றுகள், இயற்கை பவுண்டேஷன் சார்பாக 3500 மரக்கன்றுகள் வழங்கிட, லயன்ஸ் கிளப் ஆப் டைடானியம் மாவட்ட அரிமா சங்க கவர்னர் வெங்கட் சுப்பிரமணியன், K7 பம்ப்ஸ் கேசவன், சிகாபுதீன், சதாம், கே.எஸ்.ஜி கலை கல்லூரி நாட்டு நலப்பணி மாணவர்கள், இயற்கை பவுண்டேசன் நிர்வாகி ராமலிங்கம், தனுஷ், குணசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.