ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் திருக்குறள் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி

ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ – மாணவரிடையே திருக்குறள் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜெ, செட்ரிக் மானுவல் பங்கேற்றார்.  ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தில் முதுநிலை மேலாளர் தமிழரசி, ஓய்வு பெற்ற முதுகலை மற்றும் பொருளாதார பட்டதாரி ஆசிரியை வத்சலா தலைமை தாங்கினார், சபர்பன்

மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சித்ரா, ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தில் முதுநிலை மேலாளர் சுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தில் முதுநிலை மேலாளர் தமிழரசி வரவேற்புரை ஆற்றினார். சபர்பன் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சித்ரா வாழ்த்துரை வழங்கினார். போட்டியில் அடுத்தசுற்றுக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு  சிறப்பு விருந்தினராக காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜெ, செட்ரிக் மானுவல் பரிசுகளை வழங்கினார்.  ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தில் முதுநிலை மேலாளர் சுப்பு நன்றியுரை நல்கினார்.

இப்போட்டியானது இடைநிலை, மேல்நிலை, கல்லூரி என மூன்று பிரிவுகளாக

நடத்தப்பட்டது.  கல்லூரிப் பிரிவில் இளநிலை, முதுநிலை, பட்டப்படிப்பு, பொறியியல், மருத்துவம்,

பாலிடெக்னிக் மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.

முதல் சுற்று, அரை இறுதிச் சுற்று, இறுதிச் சுற்று என மூன்று சுற்றுகள் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது. பத்து மையங்களிலும் நிகழ்ச்சி நாளன்று காலையில் முதல் சுற்றும், மதியம் அரை இறுதி சுற்றும் நடைபெற்றது. இறுதி சுற்றானது, சென்னையில் வரும் அக்டோபர் 5,6 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

ஓவியப் போட்டி யைப் பொறுத்த வரை, ஒரே சுற்றாக மண்டல அளவில் மட்டுமே நடத்தப்படும்,

பேச்சுப் போட்டியின் இறுதிச் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் மாநில அளவில் முதல்

மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு முதல், இரண்டாம்,

மூன்றாம் பரிசுகள் ரூ. 10,000, ரூ. 7,500, ரூ 5,000 ரொக்கம் வழங்கப்பட்டது. மேலும் முதல் பரிசு பெற்ற பள்ளி கல்லூரிக்கு ஒரு கேடயமும் வழங்கப்பட்டது.