மலையில் இருந்து வான் நோக்கி பாயும் மின்னல்

அமெரிக்காவின் கவுதமாலாவில் மலையில் இருந்து வான் நோக்கி மின்னல் பாய்ந்து செல்லும் காட்சி வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமாலாவில் உள்ள வால்கன் டீ ஆகுவா மலையில்தான் இந்த அறிய நிகழ்வு படம்பிடிக்கப்பட்டுள்ளது.

வெயிலும், மழையும் இல்லாமல் குளிர்ச்சியான காற்று பூமியில் இருந்து மேலே எழும்போது அது மேலும் குளிர்ச்சியடைந்து மேகங்களை உருவாகுகிறது. மேகங்கள் அங்கிருக்கும் பிற மேகங்களுடன் ஒன்றோடுஒன்று  உராயும் போது இடி சத்தத்துடன் மின்னல் வெளிச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த மின்னல்கள் மேலே இருந்து கீழ் நோக்கி வருவது வாடிக்கையான நிகழ்வுதான். ஆனால் இதுவே கீழிருந்து வான் நோக்கி மின்னல் உருவாகும் நிகழ்வு வால்கன் டீ ஆகுவா மலையில் அண்மையில் நிகழ்ந்துள்ளது. இதற்கு கரணம் உயரமான மலை உச்சியில் அதிகப்படியான மின்புலம் இருந்ததே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற மின்னல் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நடந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த நிலையில் நாசா தனது இன்றைய வானிலைப்படமாக இப்புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

(Sourced)