கர்நாடக முதல்வராவாரா எடியூரப்பா ?

கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக எடியூரப்பா நாளை பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்ததால், அங்கு பா.ஜ.க ஆட்சி அமைக்க உள்ளது. இதற்கான பணிகளை கர்நாடக மாநில பா.ஜ.க மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோர பா.ஜ.க. நடவடிக்கை எடுக்கும் என்றார்.

ஆனால் கட்சி மேலிடம் இதற்கான உத்தரவை பிறப்பித்த பின்னரே ஆட்சி அமைக்க உரிமை கோரப்படும் என கூறினார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக எடியூரப்பா நாளை பதவி வகிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.