சிறுவாணி அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது

சிறுவாணி அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தெடர்ந்து பருவ மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் உயர்ந்து தற்பொழுது இது 17 அடி உயரம் அடைந்துள்ளது.

கோவையின் மிக முக்கிய அம்சமாக இருந்து வரும் சிறுவாணி ஆணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால் இதன் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதன் மொத்த கொள்ளளவு 50 அடி. இதில் கோடை காலத்தில் குறைந்த பட்சமாக 1 அடி மட்டுமே நீர் இருந்தது. அனால் தற்பொழுது சிறுவாணி ஆணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால் இதன் நீர் மட்டம் 17 அடியாக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக பட்சமாக 176 மி.மீ மழை பதிவாகி உள்ளது. ஞாயிற்று கிழமை நிலவர படி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் 17 அடியாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், நீர் பிடிப்பு பகுதிகளில் ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது. அதுவும் தொடர்ந்து 50 மி. மீட்டருக்கு அதிகாக மழை பெய்து வருவதால் இம்மாத இறுதிக்குள் அணையின் நீர் மட்டம் 20 அடியாக உயர வாய்ப்புள்ள்ளது என்று  குறிப்பிட்டுள்ளார்.

இந்த அணையின் மூலம் நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் குடி தண்ணிர் கோவையின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் அனுப்பப்டுகிறது. என்பது குறிப்படத்தக்கது.