குரு பூர்ணிமா

குரு பூர்ணிமா, இது இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ள ஒன்று. அது என்ன குரு பூர்ணிமா என்றால், ஆசிரியர்கள் தினம் நாம் கொண்டாடுவது போல தான் இதுவும். தனது குருக்களுக்கு சீடர்களும் மரியாதையை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆடி முதல் பௌர்ணமிக்கும் கொண்டப்படுகிறது.

இந்த தினத்தில், சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு கொடுத்த, கல்வியை போதித்த குருவை (ஆசிரியர்) வணங்கி வழிபாடு நடத்தும் விதமாக இந்த குரு பூர்ணிமா தினத்தில் குரு பூஜை செய்வது வழக்கம். இது பல ஆண்டுகளாக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

குரு பூர்ணிமாவை வியாச பூர்ணிமா எனவும் அழைக்கப்பட்டு வருகின்றது.

இந்நாளில் நாம் யாரை எல்லாம் வணங்கலாம் என்றால் கல்வி கற்றுக் கொடுத்த குருவை வழிபடுவதோடு, தட்சிணா மூர்த்தி, பகவத் கீதையை அளித்த கிருஷ்ணன், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுஜர் போன்றவர்களையும் இந்த குரு பூர்ணிமா தினத்தில் வழிபட்டு குருவின் ஆசி பெறலாம்.

பெளத்தர்கள் குரு பூர்ணிமா நாளில் புத்தரை சிறப்பாக வழிபாடு செய்வது வழக்கம். ஏன்னென்றால் புத்தர் ஞானியாவதற்கு முன் அவர்களது குருவாக தான் இருந்தார்

காலம் காலமாக குருவை நினைக்கும் வகையில், தான் கற்று வெளியேறிய பிறகும் தன்னுடைய குருவை நினைக்க வேண்டும் என்பதற்காக பின்பற்றப்பட்டு வந்த தினம் தான் குரு பூர்ணிமா என்பதால், இன்று குறைந்த பட்சம் நம் குருவை நினைக்கவாவது செய்யலாம்.