7 மணி நேரம் மழை ! சாலைகளில் தண்ணீர் தேங்கவில்லை !

தமிழ் நாட்டில் நிலவும் தண்ணீர்  பஞ்சத்தை தீர்க்க, தற்போது இருக்கும் சூழ்நிலையில் மழை நீர் சேமிப்பு மிக முக்கியத்துவமாக இருக்கிறது. மழைக்காலங்களில் மழைநீரை சாலையோரங்களில் எவ்வாறு சேமிக்க வேண்டும் என்பதை சீனாவில் செயல்படுத்தி உள்ளார்கள்.

பெய்ஜிங் : சீனாவில் 7 மணி நேரம் மழை பெய்து, சாலைகளில் மழை நீர் தேங்கவில்லை என்பது ஆச்சர்யம். ஆனால் உண்மை.

சீனாவில் கோடைகாலம் தொடங்கி 3 மாதம் ஆகிவிட்டது. பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. அங்கு மழை நீரை, சாலைகளில் துளையிட்டு பூமிக்கடியில் அழகாக சேமிக்கிறார்கள்.

நம் ஊரில் அரைமணி நேரம் மழை பெய்தாலே சாலைகள் குட்டைகள் போல் காட்சியளிக்கின்றனர். இதனால், மழை காலங்களில் போக்குவரத்து நெரிசல், பல நோய்கள் வரவும் வாய்ப்புள்ளது.

சீனாவில் 25 ஆண்டுகளுக்கு முன் போட்ட சாலைகள். எந்த ஒரு இடத்திலும் குண்டும் குழியும் இல்லாமல் அழகாக பராமரிக்கின்றனர். குடிநீர் லைனுக்காகவோ, டெலிபோன் லைனுக்காகவோ எங்கும் சாலைகளை தோண்டவில்லை. அங்கு சாலைகளை சிறப்பாக பராமரித்து வருகின்றனர்.

அந்த சாலையில் பலத்த மழை கொட்டும் நீர் நேராக மழை நீர் சேகரிப்புக்காக ஒவ்வொரு பத்து அடி தூரத்திற்கும் சிறு சிறு குழிகளில் போய் சேருகின்றன.

நம் நாட்டிலும் இது போன்ற திட்டங்கள் செயல்படுத்துவதால் தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்கலாம்.

மழை நீரை சேகரிக்கும் விழிப்புணர்வு அனைத்து மக்களிடமும் இருக்க வேண்டும்.