ஸ்டார்ட்-அப் முறையில் தொழில் தொடங்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 7ஆவது இடம்

இந்தியா அதிக இளைஞர்களை கொண்ட நாடு. இது அனைவரும் அறிந்தது. இந்தியாவில் ஸ்டார்ட்-அப் முறையில் தொழில் தொடங்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 7ஆவது இடம் பிடித்துள்ளது .

தமிழக இளைஞர்கள் பொறியியல் துறையில் அதிக ஆர்வம் இருந்தாலும், குறைந்த அளவே அதனை  செயல்படுத்துகிறார்கள் என்று வர்த்தக அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது. ஸ்டார்ட் அப் முறையில் தொழில் தொடங்கியதில் முதல் 10 மாநிலங்களில் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளது.

அடுத்த இடங்களில் உத்தர பிரதேசம், தெலுங்கானா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களும், 7ஆவது இடத்தில் தமிழகமும் உள்ளது. கடைசி மூன்று இடங்களில் குஜராத், கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் உள்ளன. ஜூன் மாதத்தில், நாடு முழுவதும் பரவலாக 19 ஆயிரத்து 351 ஸ்டார்ட் அப்கள், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துதல் துறையில் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.