49வது நிறுவன நாள் விழா

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 49வது நிறுவன நாள் மற்றும் தொலைதூரக் கல்வி பட்டத்தகுதி பெரும் விழா பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை வழங்கினார். பின்னர் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் இயக்குனர் ஆனந்தன், பண்ணை பட்டயப் படிப்பு குறித்து விளக்கினார். சிறப்பு முகவுரை ஆற்றிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குமார் விவசாய பெரும்மக்களின் தொழில்நுட்ப ஆர்வத்தைப் பாராட்டினார்.

விழா பேருரை நிகழ்த்திய புதுதில்லி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், தேசிய மானாவாரி விளைநிலப் பகுதி ஆணைய தலைமை நிர்வாக அதிகாரி அசோக்  தல்வாய் தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழகம் நாட்டுலேயே மற்ற வேளாண்மை நிறுவனங்களுக்கு ஒரு எடுத்டுகாட்டாக விளங்குகிறது என்றார். விழாவின் ஒரு பகுதியாக, வேளாண் பல்கலைக்கழகத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் கோவை மேற்கு மண்டல தலைமை அஞ்சல் நிலைய அதிகாரி ஷுலி பரமன் சிறப்பு தபால் அலுவலக்கத்தின் சிறப்பினை பாராட்டும் விதமாகவும், தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கத்தின் பெருமையை நிலைநாட்டவும் அஞ்சல் தலையை ரத்து செய்யும் முத்திரையையும் வெளியிட்டார்.

இந்நிகழ்வில் 25 ஆண்டுகள் சேவையாற்றிய பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், 20 மற்றும் 10 வருடங்களுக்கு மேலாக திறம்பட பணியாற்றிய ஓட்டுனர்கள் கெளரவிக்கப்பட்டனர். வேளாண் பண்ணை இளநிலை தொழில்நுட்பப் பட்ட படிப்பு பயின்ற 57 விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு பட்டங்கள்  வழங்கப்பட்டது.