சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு

பிஷப் அம்புரோஸ் கல்லூரியில் ஆங்கிலத் துரையின் சார்பாக முதலாமாண்டு மாணவர்களுக்கு சுற்றுப்புறச் சூழல் மற்றும் மரம் வளர்த்தலை பற்றி ஒரு விழிப்புணர்வு தொடக்க விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் பல்வேறு விருதுகளை பெற்ற மாரிமுத்து யோகநாதன் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர் கலந்து கொண்டு, மரம் வளர்த்தல் பற்றியும், மரம் வளர்த்தலில் உள்ள பல்வேறு முறைகள் மற்றும் பராமரித்தல் பற்றியும், படங்களுடன் விளக்கமளித்தார். கல்லூரியின் செயலர் R.D.E.ஜெரோம் அவர்கள் சிறப்புரை வழங்கினார். மேலும் கல்லூரியின் முதல்வர் பீட்டர் ராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். விழாவின் ஒரு பகுதியாக காலூரியில் உள்ள பல்துறை தலைவர்களுக்கும், மாணவர்களுக்கும் இலவசமாக மரங்கன்றுகள் மற்றும் விதைகள் வவழங்கப்பட்டது.