ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை

கோவை,பேரூர் வட்டத்திற்கு உட்பட்ட வடவள்ளி பகுதிக்கு நடைபெற்ற ஜமா பந்தியில் பொதுமக்களிடம்  பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டது..

கோவை மாவட்டத்தில் உள்ள 11 வட்டத்தில் கடந்த 18 ந்தேதி முதல்  ஜமாபந்தி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் பொது மக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, உழவர் உதவித் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேரூர் வட்டத்திற்கு உட்பட்ட வடவள்ளி பிர்கா ஜமாபந்தி பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஜமாபந்தி துணை ஆட்சியர் சுரேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றதில் பேரூர் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், துணை வட்டாட்சியர்கள் இந்துமதி, சத்யன், ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்ற இந்த ஜமாபந்தியில் வேளாண் துறை, புள்ளியியல்துறை, வனத்துறை, கால்நடை துறை,உட்பட அனைத்து துறை முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் துணை ஆட்சியர் சுரேஷ் அவர்களிடம் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர். இதனைப் பெற்றுக் கொண்ட துணை ஆட்சியர் அவர்கள் விரைவில் சம்பந்தபட்ட துறையை தொடர்பு கொண்டு பொதுமக்கள் குறைகளை ஒரு வார காலத்திற்குள் தீர்ப்பதாக உறுதியளித்தார்.

இந்த ஜமாபந்தியில் வைரமுத்து, கால்நடை உதவி மருத்துவர் பிரபு, மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சரவணகுமார், சங்கர், பாலமுருகன், கவிதா ,உட்பட பலரும் கலந்து கொண்டனர்.