பிளாஸ்டிக் உபயோகித்ததால் ரூ.15.44 லட்சம் அபராதம்

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை பிறப்பித்த பின்பும் சில இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பாட்டிலுள்ளது.

இதை தடுக்கும் விதமாக, சென்னையில் பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்கு 15.44 லட்சம் ரூபாயை அபராதமாக அதிகாரிகள் விதித்துள்ளனர்.

கடந்த 17ம் தேதி முதல் சென்னை மாநகராட்சி முழுவதும் 200 குழுக்களாக இந்த சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கடைகளில் பிளாஸ்டிக் இருப்பு மற்றும் தயாரிப்பில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். நேற்று வரை சுமார் 15,44,200 ரூபாய் அபராதமாக வசூலித்துள்ளனர்.

பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை 2,51,709 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.