ஜப்பானில் 25 புல்லட் ரயிலை நிறுத்திய நத்தை

ஜப்பான் உலக நாடுகளில் மிக முக்கிய மற்றும் மிகவும் பரபரப்பான நாடுகளில் ஒன்று. இங்கு  பெரும்பாண்மையான  மக்கள் ரயில் மூலம் தான் பயணிக்கிறார்கள்.

இந்த ரயில் எந்த வித பேரிடர் வந்தாலும் நிற்காமல் இயங்கி கொண்டே இருக்கும்.ஆனால் அண்மையில் ஒரு நத்தை ஜப்பானையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது.

தெற்கு ஜப்பானில், புல்லட் ரயில்கள் வழித்தடத்தில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக 25 புல்லட் ரயில்களின் இயக்கம் முழுமையாக நிறுத்தப்பட்டது. இதன் காரணம் குறித்து விசாரிக்க ஆரம்பித்த புல்லட் ரயில் ஊழியர்கள், ரயில் பாதைக்கு தொடர்புடைய எலக்ட்ரானிக் கருவியில் உயிரிழந்த நிலையில் நத்தை ஒன்றை கண்டுபிடித்தனர். அதன் பின்னரே 25 ரயில்களை இயக்க முடியாமல் போனதற்கு அந்த நத்தை தான் காரணம் என தெரிய வந்துள்ளது.

கட்டுப்பட்டு அறையில் உள்ள எலக்ட்ரானிக் கருவியை கடக்க முயன்ற போது, நத்தை மீது மின்சாரம் பாய்ந்து ஷாட் சர்கியூட் ஆனதாக விசாரணையில் தெரிய வந்தது. இயற்கை பேரிடர்களாலேயே நிறுத்த முடியாத ஜப்பான் ரயில்களை ஒரு நத்தை ஒரு நாள் முழுவதும் நிறுத்தியுள்ளது உலகம் முழுவதும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.