ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் முப்பெரும் விழா

ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் துவக்க விழா, மாணவர்கள் இணைப்பு விழா மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு விழா இந்த முப்பெரும் விழா கோவை கதிர் கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் நடைபெற்றது..

கதிர் கல்வி குழுமத் தலைவர் இ.எஸ்.கதிர் அவர்கள், கல்லூரியின் செயலாளர் லாவண்யா கதிர் அவர்கள் தலைமையில் கல்லூரியின் முதல்வர் கற்பகம் அவர்கள், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் முன்னிலையிலும் கோவை மாவட்ட காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம்.மாடசாமி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்து மாணவர்களுக்கு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் உறுப்பினர் படிவத்தை வழங்கி போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் “ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்பவர்கள் தன் ஆர்வத்துடனும், சமூக நோக்கத்துடனும், ஊர் தூங்க நாம் தூங்கா காவலர்களாக பணியாற்ற வேண்டும். காக்கி சட்டை போடாத கலர் சட்டை போட்ட ஒரு  காவலராக மாணவர்கள் பணியாற்ற வேண்டும்” என்று மாணவ மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியை பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஒருங்கிணைத்தார். கல்லூரி கணிப்பொறியியல் துறை தலைவர் பிரேம் குமார் நன்றி உரையாற்றினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் சுமார் ஆயிரம் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.