கே.ஐ.டியில் ஆண்டு விழா

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள கே.ஐ.டி தொழில் நுட்பக்கல்லூரியின் 11ம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது.  இதில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் நிறுவனத்தலைவர் பொங்கலூர்.நா.பழனிசாமி, துணைத்தலைவர் இந்து முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கல்லூரியின் நிறுவனத் தலைவர் பொங்கலூர்.நா.பழனிசாமி பேசுகையில் மாணவ மாணவிகள் வாழ்வில் சிறந்த வெற்றியாளர்களாக உருவாவதற்கான பல வழிமுறைகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்..எதிர்வரும் காலங்களில், பொறியியல் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றியும் அதை பெறுவதற்கு மாணவ-மாணவிகள் தங்களது திறமைகளை வளர்த்து கொள்வது பற்றியும், அதே சமயத்தில், மாணவ-மாணவிகள் தங்களது உடல் நலனில் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும் எனவும் எடுத்துக் கூறினார்.

கடந்த 11 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்களின் சாதனைகள், பேராசிரியர்களின் சாதனைகளுக்கு சான்றிதழ் வழங்கினார். கல்லூரியின் சாதனைகளுக்கு உதவி புரிந்த அத்தனை பேருக்கும் உளமார்ந்த நன்றியை தெரிவித்தார். மாணவர்களின் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக டாக்டர் வித்யா இன்குபேசன் சென்டர்க்கு ரூபாய் 5 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் மோகன்தாஸ் காந்தி அவர்களிடம் மேடையில் வழங்கினார். டாக்டர் வித்யா இன்குபேசன் சென்டர் மூலம் இளம் பொறியாளர்களிடம் புதிய ஆராய்ச்சி படைப்புகளை உருவாக்குவதற்கும் மற்றும் வடிவமைப்பதற்கும் ஊக்குவிக்கப்படுகின்றனர். மேலும் இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் மோகன் தாஸ் காந்தி அவர்கள் ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார். கல்லூரியில் ஓராண்டாக நடைபெற்ற பல்வேறு கல்வி சார்ந்த நிகழ்வுகள் விளையாட்டு நிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகள், மாணவர் திறன் மேம்பாட்டு வகுப்புகள் மற்றும் கல்லூரி வளாக வேலைவாய்ப்பு நிகழ்வுகளை எடுத்துக் கூறினார். பின் மாணவ மாணவியர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பொங்கலூர்.நா.பழனிசாமி அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார். மேலும், அண்ணாப் பல்கலைக்கழகத் தேர்வில் முதல் மதிப்பெண்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் 100 சதவீத தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் செயல் அறங்காவலர் சூரியா, துணை முதல்வர் ரமேஷ், டீன்- மாணவர் அமைப்பு சுரேஷ் பல்வேறு துறைதலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் கல்லூரி இயக்குனர் பொன்.அன்பழகன் அவர்கள் நன்றியுரை வழங்கிட விழா நிறைவுற்றது.