இரத்தினம் கல்லூரியின் மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில்  உள்ள  இரத்தினம்  கலை  மற்றும் அறிவியல் கல்லூரியில்  இன்று  16.03.2019 காலை  1௦:௦௦  மணியளவில்  2018-19 ஆம் கல்வியாண்டுக்கான  பெற்றோர்  ஆசிரியர்  கழகத்தின்  கூட்டம்  இரத்தினம் கலையரங்கில்  நடைபெற்றது.  நிகழ்ச்சியில்  இரத்தினம்  கல்விக் குழுமத்தின் தலைவர்  மதன் ஆ.செந்தில்  அவர்கள்  தலைமையில் முதன்மை செயல் அதிகாரி  மற்றும்  முதல்வர்  பேராசியர்.ரா.மாணிக்கம்,  அவர்கள்  முன்னிலையில்  நடைபெற்றது  மற்றும்  சிறப்பு விருந்தினர் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், ஐஏஎஸ் அகாடமி, பாடநெறி ஒருங்கிணைப்பாளர் எம்.பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர், விழாவிற்கு வருகை புரிந்த  பெற்றோர்  மற்றும்  மாணவர்கள்  அனைவரையும் கல்லூரியின்  முதல்வர்   முரளிதரன் அவர்கள் வரவேற்றார்.  நிகழ்வில் பேராசியர். ரா. மாணிக்கம் அவர்கள் இரத்தினம் குழுமம் சார்பாக மாணவர்களின் நலனில் அக்கறைகொண்டு கடந்த கல்வியாண்டில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் வகுப்பிலும் ,பருவத்தேர்விலும் முதல் மூன்று இடங்களை பிடித்த 309  மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை  மற்றும்  சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்.  விழாவில் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களின் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.  இவ்விழா இரத்தினம் கல்விக் குழுமத்தின் சமூக அக்கறைக்கான  ஒரு நல் முயற்சி என பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.  பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிர்வாகி (கணிணி பயன்பாட்டியல் துறை) உதவிப்பேராசிரியர் உத்திரமூர்த்தி அவர்கள் நன்றி உரை வழங்கினார்.