உலகத் தமிழ்ப் பண்பாட்டு மைய ஆறாம் ஆண்டு விருது விழா

கோவையில் உள்ள டாக்டர் என் ஜி பி கலை, அறிவியல் கல்லூரியில் கோவை உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தின் ஆறாம் ஆண்டு விருதுகள் வழங்கும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா அண¢மைய¤ல¢ நடைபெற்றது.
கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி தலைமை வக¤த¢தார¢. கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளைச் செயலர் டாக்டர் தவமணிதேவி பழனிசாமி வரவேற்றார¢. விருது பெறுபவர்களை பேராசிரியர் சிற்பி பாலசுப்ரமணியம் அறிமுகம் செய்து வைத்தார். இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 2018 ஆம் ஆண்டு உ.வே.சா. ‘தமிழறிஞர் விருதை’ முனைவர் சீனிவாசன் அவர்களுக்கும், ‘பெரியசாமித்தூரன்’ தமிழ்ப் படைப்பாளர் விருதை சின்னப்பபாரதி அவர்களுக்கும், ‘டாக்டர் நல்ல ஜி பழனிசாமி பிறதுறை தமிழ்த் தொண்டர் விருதை’ பேராசிரியர் முனைவர் கி.செழியன் அவர்களுக்கும் வழங்கிச் சிறப்புரை ஆற்றினார்.

டாக்டர் நல்ல ஜி பழனிசாமி, டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் எழுதிய ‘சாமானியனும் சர்க்கரை நோயும்’ என்ற நூலை வெளியிட, எழுத்தாளர் வரலக்ஷ்மி ரங்கசாமி பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். சாகித்ய அகாதெமி விருதாளர் எஸ்.ராமகிருஷ்ணன் விருது பெற்றோருக்கு வாழ்த்துரை வழங்கினார். டாக்டர் என் ஜி பி கலை அறிவியல் கல்லூரி இயக்குநர் முத்துசாமி நன்றியுரை வழங்கினார். கோவை மருத்துவ மைய கல்வி அறக்கட்டளையின் முதன்மைச் செயலாளரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான புவனேஸ்வரன் ந¤கழ¢ச¢ச¤யை ஒருங்கிணைத்திருந்தார்¢. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்களும் பெரியோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.