கோவையில் திரைப்பட நடிகரும்,  இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் கஜா புயல் குறித்து  பேட்டி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நலத்திட. உதவிகள் வழங்கி ஆறுதல் கூறியதாகவும்,  அங்கு ஒரு சில பகுதிகளில் மின்சாரம் கிடைக்க மேலும் இரு மாதங்கள் ஆகும் என்கின்ற செய்தி மேலும் வருத்தத்தை கூட்டுவதாக திரைப்பட நடிகரும், இசைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்

சர்வம் தாளமயம் திரைப்பட குழுவினர் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.அப்போது பேசிய படத்தின் இயக்குநர் ராஜீவ்மேனன் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழ் படத்தை இயக்கியுள்ளதாகவும்,இந்த படம் முழுக்க முழுக்க இசையை சார்ந்தது, சமூகத்தில் இசை மீது பற்றுள்ள சிறுவன் குறித்த கதை என கூறினார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 6 பாடல்கள் உள்ளதாகவும், நடிகர் அஜித்தை வைத்து இயக்கும் எண்ணம் உள்ளதா என்ற கேள்விக்கு கதைகள் அதிகம் உள்ளதாகவும், கால்ஷீட் அமைந்தால் பணியாற்ற தயாராக இருப்பதாக விளக்கம் அளித்தார். தொடர்ந்து பேசிய நடிகர் ஜி.வி பிரகாஷ் தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இசையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் சர்வம் தாளமயம் என்றும் சமூகத்தையும், அழிந்து வரும் கலை குறித்த படமாக இது அமைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் மறைந்த பாடலாசிரியர் முத்துக்குமாரின் பாடல் இதில் ஒன்று  உள்ளதாகவும் சுட்டிக் காட்டினார். கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் ஆன சின்ன முயற்சி செய்ததாகவும், எனது இந்த முயற்சி ஆயிரம் பேரை ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கஜா புயலால் ஏற்பட்ட பேரழிவு அதிகமாக இருக்கின்றது என கூறியவர்,  அதிக இடங்களில் தென்னை, வாழை மரங்கள் விழுந்ததில் அப்பகுதியே உருகுழைந்து ஆகியுள்ளகாக வேதனை தெரிவித்தார்.

அரசு மட்டும் முயற்சித்தால் போதாது என்றும் எல்லாரும் சேர்ந்து பாதிப்பை சரி செய்ய முயற்சிக்கவேண்டும் என வேண்டுக்கோள் விடுத்தார். இன்னும் அதிகமான முயற்சியினை அரசுடன் சேர்ந்து அனைவரும் சேர்ந்து எடுக்கவேண்டும் என வலியுறுத்திய ஜி.வி.பிரகாஷ்,

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரண பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறியதாகவும், ஒரு சில பகுதிகளில் மின்சாரம் கிடைக்க மேலும் இரு மாதங்கள் ஆகலாம் என்கின்ற செய்தி தமக்கு வருத்தத்தை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

மின்சாரத்துறை ஊழியர்கள் இரவும் பகலும் பாராமல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேலை செய்து வருவது பாராட்டக்குறியது என்றும் சுட்டிக் காட்டினார்.