கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பில் தொழில்சார் வணிக சிறப்பு விருது வழங்கும் விழா

கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பில், தொழில்சார் வணிக சிறப்பு விருது வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராகவும், கோயம்புத்தூர் ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் வரதராஜன் கவுரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

இதில் கோவை நகரத்தின் இரண்டு சிறந்த தொழில்முனைவோர்களான ஷிவா டெக்ஸ்யார்ன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரராமன் மற்றும் கோவை.கோ நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சரவண குமார் ஆகியோருக்கு தொழில்சார் வணிக சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது.