துள்ளி எழுந்த காளையர்களும், ஜல்லிக்கட்டு வரலாறும் !

பொங்கல் விழா என்றாலே ”ஜல்லிக்கட்டு” என்பது காளை விளையாட்டுடன் ஒன்றிணைந்தது. காளைகளை அடக்கும் நம் காளையர்களைக் காண மதுரையே விழாக் கோலத்தில் இருக்கும். ‘ஏறுதழுவுதல்” என்பதே இதன் அழகான வார்த்தையாகும். காலப்போக்கில் ஜல்லிக்கட்டு என்று மறுவியதாக கூறப்படுகிறது.

அதாவது, ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்த காலத்தில் இருந்தே, அவர்களது நாணயங்களான சல்லிக் காசுகளை ஒரு துணியில் முடிந்து காலையின் கொம்பில் கட்டிவிடுவார்கள். காளையை அடக்குபவர்கள் அந்தக் காலையின் கொம்பில் கட்டப்பட்டு இருக்கும் சல்லிகாசை எடுத்துக் கொள்ளலாம். இதுவே பின்னாட்களில் ஜல்லிக்கட்டு என்று மறுவியதாக கூறப்படுகிறது.

இந்த ஜல்லிகட்டு விளையாட்டு மூன்று வகைகளாக பிரிக்கலாம். வாடி மஞ்சு விரட்டு என்பது ஒரு திறப்பின் வழியாக வெளியேவரும் காளையை பிடித்துக் கொண்டு குறிப்பிட்ட தூரம் வரை செல்ல வேண்டும். அதன் பிடியை விடக் கூடாது.

இன்னொருவகை காளை விளையாட்டு ‘வெளிவிரட்டாகும்’. இதில் காளை திறந்த மைதானத்துக்குள் அனுப்பப்படும். காளை கயிறால் கட்டப்படுவதோ, குறிப்பிட்ட பாதையில்தான் செல்லவேண்டுமென்ற நிபந்தனையோ இருக்காது.

வட்டம் மஞ்சுவிரட்டு என்பது மற்றொரு வகை. காளை அடக்கும் போட்டியாகும். இதில் வட்டம் என்ற சொல் கயிறைக் குறிக்கும். 15 மீட்டர் நீளமுள்ள கயிறால் காளை கட்டப்பட்டிருக்கும். 30 நிமிடத்துக்குள் ஏழு அல்லது ஒன்பது பேர் காளையை அடக்க முயல்வர். இவ்விளையாட்டில் பார்வையாளர்களுக்கு எந்த ஆபத்தும் நேர்வதில்லை.

திருச்சி, திண்டுக்கல், கோவை, புதுக்கோட்டை என்று ஜல்லிக்கட்டு நடந்தாலும், மதுரையில் நடக்கும் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கள்தான் மிகவும் பிரபலமானவை.