ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மின்னொளி விளையாட்டு மைதானம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் சுமார் 70 லட்சம் ரூபாய் செலவில் மின்னொளி விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழாவுக்கு கல்லூரி துணை முதல்வர் கருப்புசாமி முன்னிலை வகித்தார். இதன் தொடர்ச்சியாக ஸ்ரீ ராமகிருஷ்ணா ஸ்தாபனங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இடையே கூடைப்பந்து போட்டி மின்னொளியில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கமும் விளையாடின. போட்டியில் 36 – 31 என்ற புள்ளி கணக்கில் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வெற்றி பெற்றது .

மேலும் மூன்றாவது மற்றும் நான்காம் இடத்தை ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை மற்றும் ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி பெற்றன.

பரிசு வழங்கும் விழாவில் கல்லூரி துணை முதல்வர் கருப்புசாமி, கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் வசந்த் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாணவர்கள், தினேஷ் ஹரிஹரன் மற்றும் ஷேக் உமருதீன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினர்.

விழா ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர்கள் நித்தியானந்தன் மற்றும் உமாராணி ஏற்பாடு செய்தனர்.