அரசு பள்ளி மாணவிகளுக்கு ஊக்கமளித்த மலபார்

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்-ன் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு (CSR) நிகழ்ச்சி கோவை மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் சார்பாக கோவை ஆர்.எஸ் புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்,  மாநகராட்சி ஆணையர் ராஜா கோபால் சுங்கரா, சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கார்த்திக், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாநகராட்சி கல்வி அலுவலர் மைக்கேல் ராஜ், ஆகியோர் கலந்துகொண்டனர். மலபார் குழுமம் சார்பாக கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவிகள் 352 பேருக்கு ரூ 5000 வீதம் ரூ1.760.000 மதிப்பிலான காசோலையை அமைச்சர் பள்ளி மாணவிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு வர்த்தக தலைவர் ராஜசேகரன், தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர் நௌஷாத், கோவை கிளை தலைவர் மனு நாயர், கோவை கிளை வர்த்தக மேலாளர் தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.