மக்கள் குறைதீர்க் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் அவர்களிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 41 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.

இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாநகராட்சி துணை ஆணையாளர் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். இக்கூட்டத்தில், மண்டல உதவி ஆணையர்கள் ரா.ரவி, செந்தில்குமார் ரத்தினம், மகேஷ்கனகராஜ், ம.செல்வன், ஏ.ஜெ.செந்தில்அரசன், உதவி ஆணையர் (வருவாய்) அண்ணாதுரை, உதவி ஆணையர் (கணக்கு) சரவணன், உதவி ஆணையர் (பணியமைப்பு) மோகனசுந்தார், செயற்பொறியாளர் பார்வதி, செயற்பொறியாளர் மேற்கு மண்டலம் எஸ்.ரவிச்சந்திரன், நகரமைப்பு அலுவலர் சசிப்பிரியா, நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், மாநகர கல்வி அலுவலர் ஆ.வள்ளியம்மாள், வருங்கால வைப்புநிதி கணக்கு அலுவலர் மாணிக்கம், கணக்கு அலுவலர்கள் லட்சுமிபிரபா (குடிநீர் பிரிவு), மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.