RNTBCI and MCET இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

ரெனால்ட் நிசான் தொழில்நுட்பம் மற்றும் வணிக மையம் மின்சார வாகனங்கள், தானியங்கி இயக்கம் மற்றும் ஒருங்கிணைந்த வாகனங்கள் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு முன்னோடி நிறுவனமாகும்.

RNTBCI சிறந்த உயர்மட்ட திறமையாளர்கள் மற்றும் பன்முக அணுகுமுறை வாயிலாக தொடர்ச்சியான கண்டுபிடிப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வளர்ச்சிகள் மூலம் மோட்டார் வாகனத் துறையில் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.

டாக்டர். மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (MCET) ஒரு புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியாகும். இங்கு பல்வேறு உயர்தர பொறியியல் தொழில்நுட்பங்கள் கொண்ட இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறைகள் உள்ளன.

சக்தி குழுமத்தால் ஊக்குவிக்கப்பட்ட, MCET, நாச்சிமுத்து தொழில் துறை சங்கத்தின் (NIA) கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். நவீன உட்கட்டமைப்பு மற்றும் வளர்ந்து வரும் துறைகலில் திறன் மையங்கள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மூலம் தொழில் மற்றும் சமூகத்திற்கான ஆக்கபூர்வமான திறமைகளை தயாரிப்பதில் MCET சிறந்து விளங்குகிறது.

RNTBCI மற்றும் MCET இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் Mr. Debashis Neogi நிர்வாக இயக்குனர், RNTBCI மற்றும் Dr. M. Manickam, Chairman, MCET ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.