“கதிரியக்கவியல் மனிதகுலத்திற்கு ஒரு முன்னேற்றம்”

சொசைட்டி ஆப் இந்தியன் ரேடியோகிராஃபர்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ்ட் மற்றும் எஸ்.என்.எஸ் கல்லூரி அலைடு ஹெல்த் சயின்ஸ் இணைந்து சர்வதேச கதிரியக்க தினத்தை கோவை குரும்பபாளையம் பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ் இன்ஸ்டிட்யூட் கல்லூரி வளாகத்தில் கொண்டாடியது.

இதில் கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டீன் நிர்மலா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, மாணவர்களிடம் கதிரியக்கம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியின் முதல்வர் செந்தூரப் பாண்டியன் மற்றும் கே.ஜி. ஹாஸ்பிடல் அண்ட் போஸ்ட் கிராஜுவேட் மெடிக்கல் இன்ஸ்டிட்யூட் – ன் டீன் மருத்துவர் குமரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து அண்ணா யுனிவர்சிட்டி பேராசிரியர் டாக்டர் தயாளன், கதிரியக்கம் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடையே பேசினார். கே.ஜி. மருத்துவமனையின் ரேடியாலஜிஸ்ட் மருத்துவர் சபரீஷ் கதிரியக்கவியல் மனிதகுலத்திற்கு ஒரு முன்னேற்றம் எனக் கூறி கதிரியக்கவியலாளரின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும், மாணவர்களிடையே கலந்துரையாடினர்.

அதற்கு முன்னர் சொசைட்டி ஆப் இந்தியன் ரேடியோகிராஃபர்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ்ட் – ன் தலைவர் வீரன் குட்டி வரவேற்புரை வழங்கினார். பொது செயலாளர் தேவராஜ் கதிரியக்கம் குறித்த விளக்கவுரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் கோழிக்கோடு, மைசூர், மதுரை, திருப்பூர், அவினாசி மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.