கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பாக கோவை மாரத்தான் 2023

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பாக உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் மேற்கு மண்டல ஐ.ஜி பவாணீஸ்வரி கலந்துகொண்டு மாரத்தானை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிச்சாமி, தவமணி பழனிசாமி மற்றும் அருண் பழனிச்சாமி, மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாரத்தான் கோவை சூலூர் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் துவங்கி அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச் மருத்துவ கல்லூரியில் நிறைவடைந்தது.