ஜியோவுக்கு போட்டியாக…..ஏர்டெல் கொடுத்த ஷாக் !

ஜியோவுக்கு போட்டியாக தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல் நிர்வாகம் ..

ரிலையன்ஸ் ஜியோ சந்தையில் அறிமுகம் ஆனபிறகு மற்ற நிறுவனங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கவும், அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் பல்வேறு சிறப்புத் திட்டங்களை ஏர்டெல், வோடஃபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில், ஏர்டெல் நிறுவனம் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இலவச நெட்ஃபிளிக்ஸுடன், ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு1500 ரூபாய்க்கும் குறைவான விலையில் இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் டேட்டாவின் பலன்களைப் பெற முடியும்.

ஏர்டெல்லின் புதிய ப்ரீபெய்ட் திட்டம் ரூ. 1,499க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், வாடிக்கையாளர்கள் தினமும் 3 ஜிபி டேட்டாவின் பலனைப் பெறலாம். அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றின் நன்மையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. வேலிடிட்டியைப் பொறுத்தவரையில், ஏர்டெல்லின் ரூ. 1,499 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் 5ஜி நெட்வொர்க்கின் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தவிர, நெட்பிளிக்ஸின் அடிப்படை திட்டத்தையும் இலவசமாகப் பயன்படுத்தலாம். இதில், பயனர்கள் அப்பல்லோ 24/7 சர்க்கிள் உறுப்பினர், விங்க் மியூசிக் மற்றும் இலவச ஹலோ டியூன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைப் பெறலாம்.