மகாலிங்கம் கல்லூரியில் அறிவியல் கண்காட்சியின் பரிசளிப்பு விழா

டாக்டர்.மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சியின் பரிசு வழங்குதல் மற்றும் நிறைவு விழா வெள்ளிகிழமை MCET கல்லூரி வளாகத்தில் உள்ள நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது.

டாக்டர்.ஏ.செந்தில்குமார், டீன்-கல்வி மற்றும் தன்னாட்சி, வரவேட்புரை ஆற்றினார். என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் டாக்டர் சி.ராமசாமி தலைமை மற்றும் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது சிறப்புரையில், பள்ளி மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை எடுத்துரைத்து, அவர்களின் அறிவியல் மாதிரிகளை மிக நுணுக்கமாக காட்சிப்படுத்தியதற்காக அவர்களைப் பாராட்டினார். மாணவர்களின் கடின உழைப்பு மற்றும் அற்புதமான படைப்பிற்காக பாராட்டிய அவர், எதிர்கால முன்னேற்றத்திற்காக அவர்களை வாழ்த்தினார்.

அறிவியல் கண்காட்சியில் சிறந்த பங்களிப்பை வழங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 46 பள்ளிகளைச் சேர்ந்த 599 மாணவர்கள் கலந்து கொண்டனர் இதில் சிறந்த பங்களிப்பாளர்கள் பல்வேறு பரிசுகளை வென்றனர்.

என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் டாக்டர் சி.ராமசாமி மற்றும் எம்சிஇடி முதல்வர் டாக்டர் பி.கோவிந்தசாமி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் ரொக்கப் பரிசு, சான்றிதழ்கள் மற்றும் கேடயத்தை வழங்கினார்கள்.