கே.எம்.சி.ஹெச் – ல் உலக பிசியோதெரபி தின விழா

கே.எம்.சி.ஹெச். பிசியோதெரபி கல்லூரி வெள்ளிக்கிழமை உலக பிசியோதெரபி தினத்தை கொண்டாடியது. இதில் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி நிகழ்வை துவக்கி வைத்து தலைமையுரை ஆற்றினார். கே.எம்.சி.ஹெச். பிசியோதெரபி பிரிவில் 18 ஆண்டுகள் ஆர்வத்துடன் பணியாற்றிய சிவக்குமார் மற்றும் அனிதா ஆகியோருக்கு பாராட்டி விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கே.எம்.சி.ஹெச். நர்சிங் கல்லுாரியின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஓ.டி.புவனேஸ்வரன், கே.எம்.சி.ஹெச். பிசியோதெரபி கல்லூரியின் இயக்குநர் டாக்டர் எட்மண்ட் எம்.டி.கூட்டோ, கே.எம்.சி.ஹெச். தொழில்சார் சிகிச்சை கல்லூரி மற்றும் டாக்டர் என்.ஜி.பி. கல்லுாரி முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.