கே.ஜி.ஹெல்த் சைன்ஸ் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

கே.ஜி.ஹெல்த் சைன்ஸ் கல்லூரியின் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல். வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் பக்தவத்சலம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சென்னை, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நாராயணசாமி கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.