ரோட்டரி கிளப் சார்பில் சாதனை விருது

கோவை மாதம்பட்டியை சேர்ந்தவர் ரங்கராஜ் இவர் சிறுவயதில் அங்குள்ள நடுநிலை பள்ளியில் பயின்று வந்துள்ளார் அப்போது அங்கு மதியம் உணவின் வழியே தனது பசியை அவர் அறிந்துகொண்டார்.

இதை முன்னெடுத்து அவர் கல்லூரி யில் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் டிப்ளோமை முடித்தார். பொதுமக்களுக்கு சேவைகளை ஈட்டும் வகையில் தனது தந்தையின் வர்த்தகத்தை எடுத்து கொண்டு தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா அளவில் மக்களிடையே பசிகளை ஆற்றினார். இவர் செய்யும் ஒவ்வொரு நிகழ்வினை பார்த்து  கடந்த 2015ஆம் ஆண்டு கவியரசு வைரமுத்துவிடம் விருதுகள் பெற்றதுடன், இளம் கேட்டரிங் சாதனை விருது,தொழில் முனைவோர் சங்கத்திலிருந்து விருது என பல்வேறு விருதுகளை பெற்றார்.

இதை தொடர்ந்து அவரது உன்னதமான வளர்ச்சிக்கு காரணமாக இருந்த கேட்டரிங் முறையை பின்பற்றிய மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களுக்கு கோவை கொடிசியா வளாகத்தில் ரோட்டரி கிளப் சார்பாக சாதனை விருதுகள் மற்றும் பாராட்டுகள் வழங்கப்பட்டது. இதில் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு பாராட்டுகளை தெரிவித்தனர்.