கோவை அவினாசி மேம்பாலத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு ஓவியங்கள்

கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தில் வரையப்பட்டுள்ள குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு குறித்தான விழிப்புணர்வு ஓவியங்கள் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது.

கோவையில் உள்ள மேம்பால தூண்களிலும், சாலையோர சுவர்களிலும் விளம்பர போஸ்டர்கள், கட்சி சார்ந்த போஸ்டர்கள் ஒட்டுவதை தடுக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாநகரில் உள்ள மேம்பாலங்கள் மற்றும் தூண்களில் நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் புகைப்படங்கள், பழைய நினைவுகளை நினைவு படுத்தும் படங்கள், மக்கள் தலைவர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், விழிப்புணர்வு குறித்தான ஓவியங்கள் ஆகியவை வரையப்பட்டு வருகின்றன. அதன்படி அவிநாசி சாலை மேம்பாலத்தில் தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவது வாடிக்கையாக இருந்த நிலையில், தற்போது அங்கு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவற்றை தனியார் கல்லூரி மாணவர்கள் வரைந்துள்ளனர். இந்த ஓவியங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.