கோவையில் கைத்தறி மற்றும் துணிநூல் கண்காட்சி

கோவை பெரியக்கடை வீதியில் அமைந்துள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் ”கைத்தறி மற்றும் துணிநூல்” என்கின்ற கண்காட்சி மற்றும் விற்பனையானது ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இக்கண்காட்சியில் பலவிதமான கைத்தறி மற்றும் துணி நூல் விற்பனைக்கு உள்ளன. இங்கு கைத்தறி வகைககள் மூங்கில் நார் புடவைகள், வாழை நார் புடவைகள், தோடா எம்பிராய்டரி வேலை, மதுரை சுங்கடி, காரைக்குடி காட்டன் புடவை, செட்டிநாடு காட்டன் புடவை, காஞ்சி காட்டன், பத்திக் சுடிதார் மற்றும் புடவைகள், துசாரர் காட்டன் புடவை, துசாரர் பட்டு புடவை, சணல் லினன் புடவை, சாந்தேரி பட்டு புடவை, மங்களகிரி புடவை மற்றும் சுடிதார், வெங்கிடகிரி பட்டு புடவை, ஜெய்ப்பூர் காட்டன் புடவை, பாகல்பூர் புடவை, சுடிதார், படுக்கை விரிப்பு, சால்வை, மதுபானி என எராளமான புடவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து புடவைக்கும் 10% சதவிகிதம் சிறப்புத்தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக்கட்டணமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும்.

இக்கண்காட்சியில் விற்பனைக்கு உள்ள கைவினைப் பொருட்களை, கோவை மக்கள் வாங்கிப் பயன் பெறுவதுடன் கலைப் பொருட்களை உற்பத்தி செய்யும் கைவினை கலைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவுமாறு பூம்புகார் நிறுவனம் கேட்டுக் கொண்டனர்.