இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அறிவியல் மற்றும் மனிதநேயத் துறை சார்பில், “கணினியின் எதிர்காலம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மெட்டா நிறுவனத்தின் டேட்டா சயின்ஸ் மேலாளரும், முன்னாள் மாணவருமான மோகன்கணீஷ் துரைராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடம், பணிபுரியும் இடத்தில எவ்வாறு தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் என்பதையும், வெற்றிகரமான வாழ்க்கையை அடைய குறிப்பிட்ட களங்களில் தங்கள் திறன்களை மேம்படுத்த மாணவர்களை ஊக்குவித்தார்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற கணினி சார்ந்த தொழில்நுட்பங்கள் பற்றியும் எதிர்காலத்தில் இன்ஜினியரிங் துறையில் கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். அவர் தனது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும், இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவனாக இருப்பதில் மிகவும் பெருமைப்படுவதாகவும், கூறினார்.

இந்துஸ்தான் கல்வி மற்றும் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியா சதீஷ் பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினரை பாராட்டி கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன், இந்துஸ்தான்  பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் ஜெயா, அறிவியல் மற்றும் மனிதநேயத் துறை தலைவர் உமா, அனைத்து துறை பேராசிரியர்கள், மற்றும் சுமார் 500 மாணவர்கள் இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டனர்.