என்.ஜி.பி.கல்வியியல் கல்லூரியில் பன்னாட்டு யோகா தினம்

கோவை என்.ஜி.பி.கல்வியியல் கல்லூரியில் அண்மையில் பன்னாட்டு யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.

இந்நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய மாணவ ஆசிரியை செல்வி சர்ச்சிகா வரவேற்புரை வழங்கினார்.

இக்கல்லூரி முதல்வர் ராமசாமி வாழ்த்துரை வழங்கினார். இயற்கை உணவுத் துறையில் உலக சாதனை படைத்த கோவை ருதம்பரா அறக்கட்டளையின் நிறுவனர் சித்த ஸ்ரீ ஈசன் குருஜி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

மேலும் மனித வாழ்க்கையில் யோகா மூலம் கிடைக்கும் நன்மைகள் மற்றும் இன்றியமையாமை குறித்து எடுத்துரைத்துரைத்தார். சமைக்காத உணவுமுறை மூலம் நோயில்லா உடல்நலத்தை பெற்று வாழவும் நமது பாரம்பரிய உணவுப் பழக்கங்கள் கடைபிடிக்கவும் வலியுறுத்தினார். எளிய முறையில் யோகா செய்வதற்கு பயிற்சி அளித்தார்.

பின்னர் யோகா செயல்முறை விளக்கும் மாணவர்களின் நடனம் நடைபெற்றது. இறுதியாக மாணவ ஆசிரியை பிரியங்கா நன்றியுரை நவில நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.