கே.பி.ஆர் கல்லூரியில் பிரவர்த்தனா – 2023 விழா

கே.பி.ஆர் கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, பிரவர்த்தனா – 2023  என்னும் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விழா புதன்கிழமையன்று  நடந்தது.

கே .பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி  இந்நிகழ்விற்குத் தலைமை வகித்துச் சிறப்பித்தார். மதுரை தியாகராசர் கல்லூரி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் மற்றும் நமது நம்பிக்கை இதழின் ஆசிரியர் முத்தையா ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டனர்.

மாணவர்கள் கல்லூரியின் வாய்ப்புகளைச் சரிவரப் பயன்படுத்தி எதிர்காலச் சாதனையாளர்களாகத் தங்களை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என அறிவுரை வழங்கினார்கள். இளைஞர்கள் தங்களது தனித்திறனை மேம்படுத்திக் கொள்வதில் ஒருபோதும்  தவறக்கூடாது எனவும், நமது கல்லூரி நிறுவனத்தின் தலைவரை  முன்னுதாரணமாகக் கொண்டு மாணவர்கள் தங்களைச் சிறந்த தொழில் முனைவோராக வளர்த்திக் கொள்ள வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்வில் கே.பி.ஆர் கல்விக்குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி , கு.ஞானசம்பந்தன்க்குக் குறிஞ்சித் தமிழ்ச்செம்மல் விருதினையும்,  முத்தையாவுக்குக் குறிஞ்சி நற்றமிழ் நூல் விருதினையும், தமிழாசிரியர் சுமதி  மற்றும்  யோகேஷ் ஆகிய இருவருக்கும் குறிஞ்சித் தமிழ் நல்லாசிரியர் விருதினையும் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்கள் உட்பட 2500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.