“நீ…வா தலைவா, இலவச கல்வி தா… தலைவா…”  – கோவையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்!

கோவையில், நடிகர் விஜய் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோவை மாவட்ட தளபதி விஜய் ரசிகர் மன்றத்தினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் நீ…வா தலைவா, இலவச கல்வி தா… தலைவா என்ற அரசியலைக் குறிப்பிடும் வாசகங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தினர் சமீபகாலமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது பொதுமக்களிடையே கவனம் பெற்றுள்ளது.